ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1291-1300)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1281-1290) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால் 130. நெஞ்சொடு புலத்தல் 211. அவர் நெஞ்சோ அவரிடம்! ஆனால், என் நெஞ்சோ என்னிடம் இல்லையே! (1291) 212. அன்பு கொள்ளாதவர் மீது நெஞ்சே ஏன் நீ செல்கிறாய்? (1292) 213. கெட்டார்க்கு நட்டார் இல்லை என, நெஞ்சே அவர் பின் செல்கிறாயா? (1293) 214. நெஞ்சே! ஊடல் முடிக்கும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன். (1294) 215. அவரைக் காணாவிட்டாலும் அச்சம்; கண்டாலும் பிரிவெண்ணி அச்சம். (1295) 216. தனிமையில் நினைத்தல்…
திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15.கற்பு இயல் 130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம். (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே! நீஎமக்(கு) ஆகா தது? அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை? உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச் செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…