மு.அறவாழியார் படத்திறப்பு, நெய்வேலி
உலகத்தமிழ்க்கழகம், நெய்வேலி மார்கழி 02, 2048 ஞாயிறு திசம்பர் 17,2017 திருவள்ளுவர் கோட்டம், நெய்வேலி 03 தமிழ்த் தொண்டர் பொறிஞர் அறவாழியார் படத்திறப்பு படத்திறப்பு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் உரை: முனைவர் க.தமிழமல்லன்
எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்
வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன! வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள…