சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல் 15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும். ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு…