தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை – தொடர்ச்சி).. நெல்லைக் கோவிந்தர் நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சந்நிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும். அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு நம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்….