(தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு – தொடர்ச்சி) நலங்கிள்ளியின் பின்னூட்டம் மெல்ல, இல்லை, விரைந்து தமிழினிச் சாகும்? தமிங்கில விளம்பரம்பற்றி,  தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது பற்றி உங்களின் பதிவு கண்டேன். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை. இன்னும் 15 ஆண்டில் நாம் அடிக்கும் துண்டறிக்கைகளையும் இந்தப் பாணியில் அடித்தாக வேணடும். இது நடக்கப் போவது உறுதி.  இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பகிரியில்(வாட்சப்பில்) தட்டச்சு செய்து மாறி மாறி உரையாடிக் கொள்வதைப் பாருங்கள். முழுக்க ஒலிபெயர்ப்புதான். அண்மையில் கல்லூரி மாணவர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளக் காண்கிறோம். அவர்கள் எழுதி…