நோர்வே : கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்
நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) நண்பகல் 13:00மணிக்கு (Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் அறம்சார் உரிமைப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவது குமுக(சமூக)அமைப்பான எமது கடமை என்று கருதி நோர்வே தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. நோர்வே தமிழச்சங்கம்…