இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! – ந.அருண் பிரகாசு இராசு
இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….