திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர்,…
சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை
திராவிட மக்கள் பொருள்களுக்கும், கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச் சொற்களல்ல. ஆராய்ச்சியில் சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை என்று புலப்படுதல் கூடும். ந.சி. கந்தையா (பிள்ளை) : தமிழ் இந்தியா: பக்கம் – 39
திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்- ந.சி.கந்தையா
திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும் திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் ‘ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ‘நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்…….போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது. – ந.சி.கந்தையா: தமிழகம்