தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி    பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்; …

மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)     ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…

மொழித்திற முட்டறுத்தல் 3 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்

(சித்திரை 7, 2045 / 20 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இறந்த மொழிகள் மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம் உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற் பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட் பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள் மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு காலத்தில்…

மொழித்திற முட்டறுத்தல் – 2 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்

(பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) 4. முதியோர் மொழி   எனினும் தமிழில் உள்ள நெருங்கிய உறவு முறைப் பெயர்களை ஆய்ந்தால் அவை அகரத்தில் தொடங்குவதன்றி, இதழ், பல், நுனிநா இவற்றின் முயற்சியால் உண்டானவை என்ற உண்மை புலனாகின்றது.   அம்மா, அப்பா, அத்தை, அம்மான், அன்னை, அண்ணன், அண்ணி, அம்பி, அத்தான், அத்தாச்சி, அண்ணாச்சி, அண்ணாத்தை, அத்திம்பேர், அம்மாஞ்சி, அம்மாச்சி, அப்பச்சி, அம்மாமி, அப்பாயி முதலிய சொற்களை நோக்குக.   இவ்வாறே பேச்சுக்கருவிகளின் எளிய…