(அதிகாரம் 087. பகை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் பகைவரது பலவகைத் திறன்களை ஆராய்ந்து தக்கவாறு நடத்தல்.     பகைஎன்னும் பண்(பு)இல் அதனை, ஒருவன்      நகையேயும், வேண்டல்பாற்(று) அன்று.      பகைஆக்கும் பண்புஇல்லா எதுவும்,        வேடிக்கை என்றாலும் வேண்டாம்.   வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க,      சொல்ஏர் உழவர் பகை.      வீரரைப் பகைத்தாலும், சொல்திறப்      பேரறிஞரைப் பகைக்க வேண்டாம்.   ஏமுற் றவரினும் ஏழை, தனியனாய்ப்,…