இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 9 ஈ யென இரத்தலை இழிவாகக் கருதிய பழந்தமிழ் நாட்டில் பிச்சை என்ற சொல் தோன்றியிருத்தல் கூடுமா என்று சிலர் ஐயுறக்கூடும். ஈ என இரத்தல் இழிந்ததுதான். ஆனால், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது. பழந்தமிழர் வாழ்வு ஈதலும் துய்த்தலும் அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். ஆதலின், ஈதல் நிகழக், கொள்வோர் இருந்துதானே ஆக வேண்டும். கொள்வோரின்றிக் கொடுப்போர் யாது செய இயலும்?…
நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…