திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் பசப்புஉறு பருவரல் பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல். (01-10 தலைவி சொல்லியவை) நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன் பண்புயார்க்(கு) உரைக்கோ பிற? பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்? அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என் மேனிமேல் ஊரும்…