அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி “என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன். மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர்…