அயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் கோயில் விழாக்களில் கொண்டாடப்படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டுக் கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், பச்சை குத்தும் கலை போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன….