கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia
படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…