திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார் ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை மீளமைத்துத் திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம் 17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்….
வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!
வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…
தொண்டிக் கடற்கரையில் தோண்டத் தோண்ட .. 500க்கும் மேற்பட்ட தெய்வப் படிமங்கள்
திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா முதலான காவலர்களும் மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி…