இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு
இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான, படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு முதல்வர் செயலலிதா தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும் கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் மத்திய அரசு இடம் அளிக்க உள்ளது.