(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல்     அதிகாரம்  077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும்.   உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன்    வெறுக்கையுள் எல்லாம் தலை.                               பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே,        ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும்,    தொல்படைக்(கு) அல்லால் அரிது.   அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது.   ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…