புலவர்கள் 1. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 16. புலவர்கள் புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள். புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார். மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…
தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 14. வாணிகம் ( தொடர்ச்சி) காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், தொண்டி, முசிரி முதலியன உலகப் புகழ் பெற்ற துறைமுகங்களில் தலைமையானவை. “உலகுகிளர்ந் தென்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி”1 விரைந்து சென்று கொண்டிருந்தன. ”அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”2 திசைகள்தோறும் திரிந்தன. ”நெடுங்கொடி நுடங்கும் நாவாய்கள்” 3 துறைமுகங்கள் தோறும் தோன்றின. …
தமிழர் வாணிகம் 1 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 14. வாணிகம் மக்கள் நல்வாழ்வில் சிறப்புப்புற்று ஓங்குவதற்கு அவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் குறைவின்றிக் கிடைத்தல் வேண்டும். ‘நாடென்ப நாடா வளத்தன’ என்று திருவள்ளுவர், குறிக்கோள் நாட்டைப்பற்றிக் கூறியிருப்பினும், ஒரு நாடு தன் மக்களுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் என்பது அரிதே. நாட்டில் உள்ள நகரங்களும் ஊர்களும் அவ்வாறே மக்கள் வாழ்வுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது. ஆதலின், ஒரு…
மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்
மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில் தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள் இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…
தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்
(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி) தமிழின்பம் தனி இன்பம் 2/3 நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34. மலைத்தலைய கடல்…
நெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
நெய்தல் நிலத்தார் உணவு ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163). தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345). காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர்….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 18 தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘ தேர்தல் என்றால்…