தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே! பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன்…