உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 54 : எழுத்தாணிப் பாட்டு சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி) என் சரித்திரம்ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை – தொடர்ச்சி) என் சரித்திரம்40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக இரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது. “சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய்…