மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார்                 என் மனம் கவர்ந்த ஆன்றோர்களில் முதன்மையானவர் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். அவரை நான் முதலில் சந்தித்த பொழுதே அவரது உருவம் என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது கருத்துகளும் செயல்களும் எனக்கு உந்து சக்தியாய் விளங்கி என் முயற்சிகளில் நான் வெற்றி பெறச் செய்து விட்டது. என் முன்னோடி அறிஞர் ஆன்றோர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைப் பற்றிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.                 இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு…