தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: தொடர்ச்சி) 13 இந்நிலையறிந்த ஆசிரியர் பெருங்குழுவும் இலக்குவனாரை அகற்றும் கொடுஞ் செயலைத் தடுக்கக்கூடிற்று. ஆங்கில மொழியில் ஓங்கிய சிறப்புப் பெற்ற வரும் நல்லுள்ளம் கொண்டவருமான சீதரமேனேன், ‘தன் கடமையைத் தவறாது செய்யும் இப்பேராசிரியர் (இலக்குவனார்) அகற்றப்படுவது குறித்து யாம் அஞ்சுகிறோம். நாளை நமக்கும் இந்நிலை ஏற்படாது இருக்குமா? ஆகவே இவரை அகற்றும் எண்ணத்தை நீக்கி, மனத்தில் அமைதியை நிலைத்திடச் செய்க’11 என்று மொழிந்தனர். ‘இலக்குவனாரைக் கல்லூரியிலிருந்து அகற்றும் செய்தியை அறிந்து மாணவர்கள்…