பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுவோம்! – ஔவை துரைசாமி
இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலை மடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிற நாட்டார் தலை வணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையீறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும்…