நள்ளிரவில் மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பதற்றம்
தேவதானப்பட்டியில் நள்ளிரவில் பதற்றம்! மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு தேவதானப்பட்டியில் வெடி வெடித்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது. தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் தனியார் திருமண மண்படம் உள்ளது. இத்திருமண மண்டபத்தில் புல்லக்காபட்டியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவையொட்டி தாய்,மாமன் வரவேற்பு நிகழ்ச்சியில் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளும், கண்ணாடிகளும் அதிர்வடைந்தன. மேலும் மஞ்சளாறு அணைச் சாலையில் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த சேக்கு என்பவருக்குச்…