செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை. கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…
தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்
தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து சட்ட மன்றத் தேர்த்லில் வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சுப் பொறுப்புகள் நிதித்துறை, மின்துறை ஆகியவற்றை முதல்வர் கெசுரிவால் வைத்துக் கொண்டுள்ளார். சோம்நாத் பாரதிக்குச் சட்டம்-சுற்றுலாத் துறையும், கிரிசு சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு,…