மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

   புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….

பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்

தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.