சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்
“முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான காணிகள் (ஏக்கர்கள்) நிலம் ஓசை இன்றிச் சிங்கள மயமாக்கப்பட்டபடி உள்ளன. இவற்றைக் கேள்வி கேட்க வேண்டிய அலுவலர்கள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியலாளர்கள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை” எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது. 127 சிற்றூர்(கிராம)ச் சேவகர்கள் பிரிவினையும், 1,15,024 பேரையும் உள்ளடக்கிய 5 மண்டல(பிரதேச)ச் செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரப் புதுக்கல் (சதுரக் கிலோ மீற்றர்) பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் காணிகளுக்கும்(ஏக்கருக்கும்) மேற்பட்ட நிலங்களை சிங்களம் விழுங்கி விட்டது. இம்மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ் மக்களின்…
அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.
அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும். அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல
முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்
தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்! தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது. தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…
ஈழப்படுகொலைகள் தொடர்பில் சான்றுகள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விப் படிவங்கள்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்….