மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்
மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…
சொல் ஓவியம் – சாமி.சிதம்பரனார்
சொல் ஓவியம் பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத்தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஓர் ஒளி விளக்கு பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய சங்கக்கால இலக்கியங்கள். இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பதுபோல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம். பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட…