மறக்க முடியுமா? பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்   நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் & தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். மாசி 29, 1938 / 1907ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம்  நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார். அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப் படிப்பு தடைபட்டு, தொடர முடியாமல் இருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இவரின் தந்தை 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான்…