பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017  மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா   அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும்.  இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.     படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…