இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா – சென்னை

  மார்கழி 24, 2048 திங்கள்  08.01.2018 அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், ஆர்க்காட்டுச்சாலை,  வடபழனி பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பில் அருட்திரு இயோ.நீலமேகம் தலைமையில் வந்துள்ள இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா

சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு   தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005   தலைமை :  அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி

நயினைத்தவம் மணிவிழா

நயினைத்தவம். அவர்களின் மணிவிழா சென்னை மேற்கு மாம்பலம் ஆனந்து சந்திரசேகரரங்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆவணி 20, 2046 / செப்.09, 2015 காலை நடைபெற்றது. பெருங்கவிக்கோ வா.மு.சே.தலைமையில் கவிக்கொணடல் மா.செங்குட்டுவன், மேனாள் மாநகரத்தலைவர்(மேயர்) சா.கணேசன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கனடாநாட்டுத்தமிழ் .எழுத்தாளர் நயினைத் தவம் ஏற்புரையாற்றினார். தமிழ்ப்பணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். கவிச்சிங்கம் கண்மதியன் நன்றிநவின்றார். – மறைமலை இலக்குவனார்

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙி : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி)   4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக!   தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு…

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙா : இலக்குவனார் திருவள்ளுவன்

       (ஆவணி 15, 2045 / 24 ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக!   பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உலகத் தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத்…