உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தும் உலகத் தமிழ் எழுச்சி மாநாடு சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018 பெரியார் திடல், சென்னை 600 007 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாநாட்டுப் பொறுப்பாண்மையர்
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும். வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப் புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்! அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின் அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும் …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்! முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும் பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’ இன்று…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும் பகல் வந்தால் பிணங்கி ஓடும்! நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்! பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்!…
தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல், சென்னை
கார்த்திகை 12, 2047 / திசம்பர் 07, 2016 மாலை 6.00 பெரியார் மணியம்மை மன்றம்,சென்னை 600 007 தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல் கலிபூங்குன்றன் சந்திரகாசன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சா.கணேசன் மணிமேகலை கண்ணன் இதயதுல்லா உலகநாயகி பழனியப்பன் வா.மு.சே.திருவள்ளுவர் கண்மதியன் செந்தமிழ்ச்செழியன் வா.மு.சே.ஆண்டவர் திவாகரன் திராவிடர் கழகம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் பன்னாட்டுத் தமிழ் நடுவம்
7 ஆம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு
ஆடி 9 & 10, 2046 / சூலை 25 & 26, 2015 வாசிங்டன் மேரிலாண்டு உலகத்தமிழ் அறக்கட்டளை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**
(புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…