சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு      தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறள் குறித்த பன்னாட்டு மாநாட்டினை உலகத் தமிழ்ச் சங்கமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ளன. இரண்டு நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள், குறள் நெறி ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், பல்துறை அறிஞர்களிடம் இருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில்…