சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்
சிங்கள அரசின் ஏமாற்று வேலை இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது. 2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…
இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி, சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத இலங்கை, …
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர்…
இலங்கை அமைச்சர் பெரிசு தில்லி வர இசைவளிக்கக் கூடாது :இராமதாசு
இனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது…