காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம் தெரிவிப்பு !
காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம் [Monitoring Accountability Panel (MAP)] தெரிவிப்பு ! ஐ.நா. மனித உரிமையவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை எனப் பன்னாட்டு வல்லுநர் குழு ஐ.நா. மனித உரிமை யவையில் குற்றஞ்சாட்டியுள்ளது. சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு வல்லுநர்கள் குழுவே Monitoring Accountability Panel (MAP) இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பன்னாட்டு நீதிபதியாகவும், உசாவல்- மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற செப்ரி…