பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது.
சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர் செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார். பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன. வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாத புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன. தனியார் உயர்நிலை மருத்துவமனைகளுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. மூளை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அறுவை மருத்துவம் இல்லாமல் சரி செய்து பண்டுவம் அளிக்கஉரூ.5 கோடி மதிப்புள்ள இரத்த நாள அடைப்புநீக்குக் கருவி வாங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு…