எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?
இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும் வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள் எவையாயிருப்பினும்…