இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
இளைஞர் கைகளில் இணையத்தமிழ் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…
தாள்சுவடிகள் பாதுகாப்பு – ஆவணப்படுத்தல் பயிலரங்கம்
பங்குனி 16, 2047 / மார்ச்சு 29, 2016 காலை 11.00 தஞ்சாவூர் பேரா.சு.இராசவேலு அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் rajavelasi@gmail.com
“பயிலரங்கம்” – 6, சூலூர்
“பயிலரங்கம்” – 6 நாள் : மாசி 30, 2047 / 13-03-2016 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆனைமுத்து அவைக் கூடம், கலங்கல் பாதை, சூலூர், கோவை. உரை: தோழர் தியாகு அமர்வு 1 : காலை 10 முதல் மாலை 4 வரை பொருள் : ” மார்க்சியப் பொருளியல் அடிப்படைகள்” அமர்வு : 2 மாலை 4 முதல் 6 வரை பொருள் : “சின்னாபின்னமாக்கப்படும் சிரியா “ ஏற்பாடு : மார்க்சிய ஆய்வு மையம் ,கோவை தொடர்புக்கு:…
தமிழகத் தொல்லியல் பயிலரங்கம், கோவை
ஆடி 30 & 31, 2016 / ஆக. 15 & 16, 2015
சங்க இலக்கியப் பயிலரங்கு,
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…
புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து…
இராணிப்பேட்டையில் வினைதீர்த்தான் நிகழ்த்திய பயிலரங்கம்
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைகாசி 23, 2045 / 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தப்பெற்றது. தன்னார்வப் பணியில் பெரிதும்ஆர்வம் மிக்க வினைதீர்த்தான் இப்பயிலரங்கத்தை நிகழ்த்தினார். மாணாக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் ஏற்படுத்துவதில் பேரார்வம் மிக்க, தலைமை ஆசிரியை திருமதி சந்தானம் பயிலரங்கத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் ஒருங்கிணைத்தார். உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக…