சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்
சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல் சவூதி இரியாத்து நகரில் பரங்கிப்பேட்டை இசுலாமிய நல்வாழ்வுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரங்கிப்பேட்டை குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்வு 17 மார்ச்சு 2017 அன்று இசுதிராஃகா இலயாலைனா என்னும் மகிழகத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வுற்றது. இதில் அகவை வாரியாக பிள்ளைகளுக்கான ஒப்பித்தல்(கிராஅத்து) போட்டிகள், பேச்சுப் போட்டி, இசுலாமிய வினாவிடை எழுத்துத் தேர்வு, ஆண்கள் பெண்களுக்கான இசுலாமிய எழுத்துத் தேர்வு ஆகிய அறிவுசார் போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து, மட்டைப்பந்தாட்டங்களும், மாற்றி எண்ணு(யோசி), ஊமை விளையாட்டு (Dumb Charades)…