வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 37(2.07) பரத்தையை விலக்கல் பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள். மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள். 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள். இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்; இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள். உடைமுதற் பொருளெலா…