கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார். விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார் இரமேசு சிறப்புரையில், “சிறு…
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும். விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும். விருதுகள் : திருவள்ளுவர் விருது : திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப்…