வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.    வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை      இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 : செ. இரவிசங்கர்

  பேராசிரியர்  சி.இலக்குவனாரின்  திருக்குறள் உரைச் சிறப்பு   1/2                                          முன்னுரை:  திருக்குறளுக்கு  உரையெழுதிய பலருள்  சி.இலக்குவனாரும் ஒருவர்.  தமிழுக்காகப் பணி  செய்த  மாபெரும்  அறிஞர் இலக்குவனார்  என்பதை  இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின்  முலம்  அறியலாம்.             “இலக்குவனாரின்  தமிழறிவும்ஆற்றலும்,  துணிவும்,  திறமையும்,  அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும்,  விடா முயற்சியும்,  தொண்டு  புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும்  பாடுபடும் தன்மையும்  பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்”   என்கிறார்.  இது முற்றிலும்  உண்மையாகவே  அவரது   தமிழ்ப்பணியைப்  பார்க்கும்போது  தெரிகிறது. இவ்வளவு  திறமையும்  உழைப்பும்  கொண்ட  இலக்குவனாரின் பணிகளுள்  திருக்குறளுக்கு இயற்றியுள்ள  உரைப் பணி போற்றத்தக்கதாகும். …