தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 Thamizh Academy Awards – 2016 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4 நான்கு ஆண்டுகளாக…