பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) ஆய்வகம் ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது. வகுப்பறை பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன்…