(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 24. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):25 4. குலமும் கோவும் தொடர்ச்சி பல்லவர் குடி மன்னர் பல்லவர் ஆட்சி     பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டையாளத் தலைப்பட்டார்கள். ஏறக் குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் என்னலாம். சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர்பீடும் பெயரும் குறிக்கபடுகின்றன.41 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில…