குமுக வளர்ச்சி – முனைவர் இராம.கி.
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே என்றைக்கும் நீங்கா திரு! இந்த இனிய மாலைப்பொழுதில் இவ்வரங்கிற் கூடியிருக்கும் பள்ளத்தூர்வாழ் மக்களுக்கும் விழா அழைப்பாளருக்கும் முதற்கண் என் வணக்கம். சிவன்கோயிற் தேரையிழுத்து நிலைகொள்ளச் செய்த களைப்போடு எல்லோருங் கூடியுள்ள நிலையில், அடுத்த கோயில்நிகழ்ச்சி தொடங்குமுன் இடைப்பட்ட நேரத்தில், உங்களோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு என் நன்றிகள். துடிப்பான இளைஞரும், தொழில்முனைப்பாளரும் (industrialist) ஆன அருண் கூப்பிட்டும் இங்கு வராமல் இருக்கலாமா?…
நாத்திகர் விழா , மேட்டூர்
ஆவணி 7, 2045 / ஆக. 23, 2014