பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2.
(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) கழிப்பிடங்கள் 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சம், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே திடலிலோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்றுகளுடன்…