பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி
இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம் மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள் நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே, உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்