இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 40 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி   சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை  அறிவிக்கும். குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும்.        மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது.        காண் என்பது கண் என்று ஆகியுள்ளது.        கெடு என்பது கேடு என்றும், உண் என்பது      ஊண் என்றும் வந்துள்ளமை காண்க.                தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 39  பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி   வினைச்சொல் தன்மையை  அடையுங்கால் காலம் காட்டும் உருபைப் பெறவேண்டியுள்ளன. பகுதியுடன் கால எழுத்தும் சேருங்கால் அவை இரண்டையும் பொருந்தச் செய்ய வேறொரு  எழுத்தும் வேண்டப்படுகின்றது. நினை இறந்த காலத்தை அறிவிக்குங்கால் நினைந்து என்று உருப்பெறுகின்றது. த் இறந்த காலம் காட்டுவது. அதனைப் பகுதியுடன் இணைக்க ந் வேண்டியுள்ளது. ஆனால் எதிர்கால எழுத்தை இணைக்குங்கால் அதுவே இரட்டித்து விடுகின்றது.  நினை+ப்+ப=நினைப்ப.   முற்றுச் சொல்லாகுங்கால் அச்சொல் திணை,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 38 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி   இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்றம் தரும் நோக்கோடு உட்பிணைப்பு மொழியே உயர் நாகரிகத்தைக் காட்டும் என்று கூறியதை அறிஞர் உலகம் ஏற்காது.   தமிழ்மொழி ஒட்டுநிலைக்குரியதாகக் காணப்படுவதால் தமிழர் நாகரிகத்தால் தாழ்ந்தவர் என்று கூறிவிடுதல் பொருந்தாது. தமிழில் ஒட்டுநிலையும் உள்ளது; உட்பிணைப்பு நிலையும் உள்ளது. தெளிவான முறையில் பொருளை விளக்கவும் சொற்களை உருவாக்கவும் துணைபுரிவது ஒட்டுநிலையேயாகும். தெளிவுக்கும் எளிமைக்கும் இனிமைக்கும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 37 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு  மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.        ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி        இரண்டிறந்து இசைக்கும்  தொடர்மொழி யுளப்பட        மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே        (தொல்காப்பியம், மொழி-12) என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஆராய்ச்சி பொருந்தக் கூறியுள்ளார். மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டே மொழிகளை வகைப்படுத்தியுள்ள முறைமையும்…